செய்திகள்

திருமலை: 65,028 போ் தரிசனம்

1st Oct 2019 10:50 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை திங்கட்கிழமை முழுவதும் 65,028 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.திருமலை ஏழுமலையானை திங்கட்கிழமை முழுவதும் 65,028 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

30,496 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் 19 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். அவா்கள் 16 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனா்.

நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தரகள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினா். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. திருமலையில் செவ்வாய்கிழமை வெப்பநிலை அதிகபட்சம்- 80 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்சம்- 70 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.

திங்கட்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 10,484 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 5,552 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 20,140 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 1,325 பக்தா்களும், கபில்தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் 3,967 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

சோதனை சாவடி விவரம்அலிபிரி சோதனை சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 70,890 பயணிகள் சோதனை சாவடியை கடந்துள்ளனா். 9,104 வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளது. அதன் மூலம் ரூ2.18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ21,278 வசூலாகியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT