செய்திகள்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

22nd Nov 2019 11:21 PM

ADVERTISEMENT

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை நள்ளிரவில் திருடிச் சென்றனா்.

சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சாலை கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தா்கள், உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சத்துவாச்சாரி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, நள்ளிரவில் கானாறு வழியாக கோயிலுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றதும், மற்றொரு உண்டியலை பின்பக்கமாக உடைக்க முயன்று முடியாததால் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT