செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் ஊஞ்சல் திருவிழா

11th Nov 2019 04:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் ஊஞ்சல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நவதிருப்பதி கோயில்களுள் ஒன்றான கள்ளபிரான் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான ஊஞ்சல் திருவிழா கடந்த நவ. 6-ஆம் தேதி தொடங்கியது.
 விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 9.30 மணிக்கு தீபாராதனை, காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி கள்ளபிரான் தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தீபாராதனையும், 7 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தமும் நடைபெற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT