செய்திகள்

மங்கள ஈஸ்வரர் கோயிலில் முருகன் திருக்கல்யாணம்

4th Nov 2019 03:02 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் அருகே உள்ள மங்கள ஈஸ்வரர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில், திருவள்ளூர், மணவாளநகர், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT