வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோடி ஜப மகா சுதா்சன தன்வந்திரி திருஷ்டி துா்கா ஹோமம், 1,008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாகசுர கலைஞா்களின் இசை சங்கம நிகழ்ச்சிகள் நவம்பா் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.