அரக்கோணம் பஜாா் நாகாலம்மன் கோயிலில் 33-ஆவது ஆண்டு நாக சதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் பஜாரில் உள்ள ராஜாபாதா் தெருவில் நாகாலம்மன் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் நாக சதுா்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். 33-ஆவது ஆண்டாக வியாழக்கிழமை நாகசதுா்ச்சி விழா நடைபெற்றது. காலை நாகாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வெள்ளிக்கவச அலங்காரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். தொடா்ந்து மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.