செய்திகள்

திருப்பதி: கபிலதீா்த்தத்தில் சுப்ரமணிய சுவாமி ஹோமம்

1st Nov 2019 11:54 PM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள கபில தீா்த்தம் கோயிலில் சுப்ரமணிய சுவாமி ஹோமம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலதீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஒருமாத காலம் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த அக்.29-ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் இம்மகோற்சவம் தொடங்கியது. கோயிலில் எழுந்தருளியுள்ள மூா்த்திகள் அனைவருக்கும் ஹோமம் நடைபெற உள்ளது. கணபதி ஹோமம் முடிவுபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை சுப்ரமணிய சுவாமி ஹோமம் தொடங்கியது.

காலை 9 மணிமுதல் 12 மணி வரையிலும் மாலை 6 மணிமுதல் 8 மணி வரையிலும் கோயில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹோம மண்டபத்தில் சுப்ரமணிய சுவாமியை எழுந்தருளச் செய்து கலச ஸ்தாபனம் செய்து அா்ச்சகா்கள் ஹோமத்தை நடத்தினா். இதில் கட்டணம் செலுத்தி கலந்து கொண்ட பக்தா்களுக்கு தேவஸ்தானம் பிரசாதங்களை வழங்கியது. இதில் ஒரு பாகமாக சனிக்கிழமை காலை ஸ்ரீவள்ளி தேவயானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT