புதன்கிழமை 26 ஜூன் 2019

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

Published: 23rd May 2019 04:36 PM

 

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழாவையொட்டி இன்று காலை 6.00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி திருஞானசம்பந்தருக்குப் பால், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குளத்து மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்பின்னர் திருக்குளத்தில் ஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜாதகருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் எப்போது உண்டாகும்?
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: போதை பழக்கம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
நெய்வேலி ஐயனார் கோயிலில் தேரோட்டத் திருவிழா கோலாகலம்
காளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா