ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் சிவன்

ஏழுமலையானை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் சிவன் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் சிவன்


ஏழுமலையானை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் சிவன் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட உள்ளதை முன்னிட்டு, ஏழுமலையானை வழிபட இஸ்ரோ தலைவர் சிவன் திங்கள்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த அவர் மேலும் கூறியது:
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்  மூலம் ரிசாட்-2பிஆர் செயற்கைக்கோள் புதன்கிழமை அதிகாலை 5.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான மணிநேர 25 மணிநேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
இந்த செயற்கைக்கோளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், இது பூமியை மிகத் துல்லியமாகப் படம் எடுக்கும் திறன் உடையது. ராணுவப் பயன்பாட்டிற்காக விண்ணில் ஏவப்படும் இந்தச் செயற்கைக்கோள் பூமியிலிருந்து 556 கி.மீ. தொலைவில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதேபோல் சந்திராயன்-2 வரும் ஜூன் இரண்டாவது வாரத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அது செப்டம்பர் 6-ஆம் தேதி சந்திரனில் இறங்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com