டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க ஜோதிடம் கூறும் முன்னெச்சரிக்கை!

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பரிந்துரைப்படி
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க ஜோதிடம் கூறும் முன்னெச்சரிக்கை!

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பரிந்துரைப்படி இந்தியாவில் தேசிய டெங்கு தினம் மே 16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நோய் பரவல்  பருவம் தொடங்கும் முன், மக்களுக்கு டெங்குவைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதும் தடுப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதும் நோயைக் கட்டுப்படுத்த மக்களை தயார் படுத்துவதும் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் கொசுவின் மூலமாக பரவக்கூடியது. இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் தலைவலி, கை கால் மற்றும் உடம்பு வலி மற்றும் மிக கடுமையான காய்ச்சல் ஏற்படும். இக்காய்ச்சல் வந்த சிலருக்கு தோலில் ஆங்காங்கே தட்டம்மை ஏற்படும் போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால், மிக கொடூரமான, இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி, உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். முறையாக நோயாளிகளைக் கவனிக்காத பட்சத்தில் இரத்தப்பெருக்கு உண்டாகும். இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துபோகும்.

ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

டெங்கு காய்ச்சலின் போது ஒரேயடியாக ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி என்பன பெரும்பாலும் ஏற்படுவதுடன் சில நோயாளர்களுக்கு சிவப்பு நிற பரந்துபட்ட தன்மையில் கொப்புளங்கள் மற்றும் சில வேளைகளில் குருதி கசியும் நிலைமைகள் பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெய்யை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக்கொள்வது நல்லது.

பொதுவாக, டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவருக்கு, மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவருக்கு, வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்ச்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால், உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிகக் கடுமையான டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடம்பில் நரம்பு வழியாக, நீர்ச்சத்து ஏற்றப்படுவதோடு, இரத்தமும் ஏற்றப்படும்.

டெங்கு காய்ச்சலுக்குக்காண ஜோதிட காரணங்களும் பரிகாரங்களும்

நீர் ராசிகள்

டெங்கு காய்ச்சல்  நீரினாலும் கொசுவினாலும் பரவும் நோய் என்பதால் நீர் ராசிகள் எனப்படும் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளின் தொடர்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் ராசிகளை சர நீர் (ஓடிக்கொண்டே இருக்கும் நீர்), ஸ்திர நீர் (தேங்கும் நீர்), உபய நீர் (ஒடும் மற்றும் தேங்கும் தன்மை கொண்டது) எனப் பிரிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் கடகம் சர நீர் ராசியாகவும் விருச்சிகம் ஸ்திர நீர் ராசியாகவும் மீனம் உபய நீர் ராசியாகவும் ஜோதிட சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தேங்கும் நீரில்தான் கொசுக்களின் உற்பத்தி அதிகம் என்பதாலும் மற்ற நீர் ராசிகளை விட விருச்சிக ராசி மற்றும் அதன் அதிபதியின் தொடர்பு டெங்கு ஜ்வரத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். மேலும் பன்னிரெண்டு ராசிகளில் விருச்சிக ராசி கீட ராசி என்றும் நச்சு ராசி என்றும் அழைக்கபடுகிறது. விருச்சிகம் விஷத்தன்மை மற்றும் நோய் பரப்பும் தன்மையுள்ள ராசியாகவும், அசுத்த நீரினையும் விஷ ஜெந்துகளையும் குறிக்கும் ராசி கால புருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிக ராசியாகும். 

விஷக்கிருமிகளை பெருக்கும் ராகு-கேது

விஷக்கிருமிகளின் உற்பத்தி செய்வது அதிலும் முக்கியமாக கண்ணுக்கு தெரியாத நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை பரப்புவதும் ஸர்ப கிரஹங்களான ராகு-கேதுவின் முக்கிய காரகமாகும். மேலும், கிருமிகளை வேகமாக காற்றில் பரவ செய்வதில் ராகுவின் பங்கு முக்கியமானதாகும்.

காய்ச்சலுக்கான காரக கிரஹங்கள்

மருத்துவ ஜோதிடத்தில் காய்ச்சல் எனப்படும் ஜ்வரத்தை மூன்று வகையாக பிரித்துக் கூறுகின்றனர். அவை, 

வாத ஜ்வரம் - உடல் வலியுடன் கூடிய காய்ச்சல்

பித்த ஜ்வரம் - தலைவலி மற்றும் வாந்தியுடன் கூடிய காய்ச்சல்

கப ஜ்வரம் - ஜலதோஷம், சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல்

வாத ஜ்வரத்திற்கு சனைச்வர பகவானும், பித்த ஜ்வரத்திற்கு செவ்வாய் மற்றும் சூரியனும், கபஜ்வரத்திற்கு சந்திரனும் காரகத்துவம் வகிக்கின்றனர். 

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு பார்க்கும் போது அம்மை நோயின் தன்மையும், கை கால் வலிகளும் ஏற்படுவதால் செவ்வாய் மற்றும் சனியின் காரகங்கள் இங்கு அதிகமாகச் செயல்படுகிறது. மேலும் ஊசி போன்ற ஆயுதங்களுக்கும் ரத்தத்திற்கும் செவ்வாய் காரகராகும். கொசு கடித்து கிருமிகள் ரத்தத்தில் பரவி டெங்கு காய்ச்சல் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களுக்குக் காரகரும் செவ்வாயாகும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் வேகமாகக் குறைவது கருத்தில் கொள்ளவேண்டும்.

மருத்துவமனை வாசம்

ஒருவர் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெறுவதற்கு கால புருஷ பன்னிரெண்டாம் பாவம், அதன் அதிபதியான குரு, சுக்கிரன், ஜென்ன ஜாதக பன்னிரெண்டாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் தொடர்பு ஜாதகத்தில் அமைந்திருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்கள். மேலும் ஜாதகத்தில் 6/8/12 அதிபதிகள் அவர்களுக்குள் வீடு மாறி அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெற்றிருந்தாலும் மருத்துவமனை வாசம் ஏற்படும்.

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கிரக நிலைகள்

1. உடல் பலம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு லக்னம் மற்றும் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும். லக்னம் அல்லது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு, ராகு/கேது மற்றும் மாந்தி சேர்க்கை, லக்னாதிபதி நீசம் அடைவது, சந்திரன் நீசம் அடைவது ஆகியவை உடல் ரீதியான பிரச்னைகளையும் அதனால் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வினை ஏற்படுத்தும்.

2. லக்னம்/சந்திர ராசி காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளாக அமைந்தால் அவர்களுக்கு ஆறாம் வீடு நீர் ராசிகளாக அமைந்துவிடுவதால் பொதுவாகவே நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களும் தாக்கும். அதிலும் லக்னத்தில் ஆறாம் அதிபதியே நீர் ராசி அதிபதியாகி நின்றுவிட்டால் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுவது உறுதியாகிவிடும்.

3. ஜெனன ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் காய்ச்சலைத் தரும் செவ்வாய், சந்திரன், சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று நிற்பது.

4. ஜெனன ஜாதகத்தில் ஆறாம் பாவதிபதியோடு சந்திரன், செவ்வாய் மற்றும் சனி பார்வை சேர்க்கை பெறுவது.

5. ஜெனன ஜாதகத்தில் சந்திரன்,  செவ்வாய் மற்றும் சனி வீடுகள் மாறி பரிவர்தனை பெற்று 6/8/12 அதிபதிகளுடன் தொடர்பு கொள்வது.

6. கால புருஷ எட்டாவது ராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி, செவ்வாய், மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுவது.

7. நீர் கிரஹங்களில் ராகு/கேது நின்று, சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களை பார்ப்பது.

8. சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் வீடுகள் 6/8/12 வீடுகளாகி விபரீத ராஜயோகம் ஏற்படுவது.

9. நோய் எதிர்ப்பினை தரும் குரு பகவான் 6/8/12 தொடர்பு மற்றும் வக்ர நிலையில் நிற்பது, தனது வீட்டிற்கு 12-ல் நிற்பது.

டெங்கு காய்ச்சல் எப்போது வரும்?

1. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் மேற்கண்ட கிரக நிலைகளைக் கொண்டு தசா புத்தி அந்தரங்களை நடத்துவது.

2. ஸர்ப கிரகங்களின் தசைகளில் சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் புத்தி அந்தரங்கள் நடைபெறுவது.

3. கோசாரத்தில் நீர் கிரகங்களில் ராகு/கேது நிற்பது மற்றும் திரிகோண பார்வையில் சனி மற்றும் செவ்வாயைப் பார்ப்பது.

4. விருச்சிகத்தில் கோச்சார சனி பயணம் செய்வது.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்

1. டெங்கு காய்ச்சல் நீரினால் ஏற்படும் நோய் என்பதால் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் சந்திரனின் காரகம் பெற்ற உப்பினை தூவுவது நோய்க் கிருமிகள் பரவுவது மற்றும் கொசு உற்பத்தியைக் குறைக்கும். மேலும் ராகுவின் அம்சம் நிறைந்த பிளீச்சிங் பெளடரை ஈரம் நிறைந்த இடங்களில் தெளிப்பது கொசுவின் உற்பத்தியைக் குறைக்கும்.

2. சந்திரனின் அம்சமான குடிநீரை செவ்வாயின் அம்சத்தோடு சேர்த்து வெந்நீராக்கிப் பருகுவது.

3. பொதுவாக காய்ச்சலுக்கு காரகர் செவ்வாய் தான் மருத்துவத்திற்கும் காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம். செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலில் உள்ள ஜ்வரஹரேஸ்வரரை பிரார்த்திக்க ஜ்வரங்கள் (காய்ச்சல்) நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஜ்வரஹரேஸ்வருக்கு ரசம் சாத நிவேதனம் செய்வதாக பிரார்த்திப்பதும் ஜ்வரங்கள் நீங்கியபின் அவருக்கு ரசம் சாதம் நிவேதனம் செய்வதும் பிரசித்திபெற்ற பிரார்த்தனையாகும்.

4. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கிடையாது என்று கூறப்படுகிறது. என்றாலும் டெங்கு ஒரு வாத சுரம் என்பதாலும் சனியின் காரகம் பெற்ற "யுபடோரியம் பெர்போலியேட்டம்" எனும் ஹோமியோ மருந்து டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக மருத்துவ ஜோதிடம் பரிந்துரைக்கிறது. இதனைத் தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நன்மையளிக்கும்.

5. காய்ச்சலின் தீவிரத்தை குறைக்கவும் எதிர்ப்பு சக்தி ஏற்படவும் சில மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகிறது. பொதுவாக கசப்பு சுவைக்கு காரகர் சனைச்சர பகவானகும்.  வாத ஜ்வரமான டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர், ஆயுர்வேத மருந்தான பாரங்யாதி கஷாய சூர்ணம், ஷடங்க பானியம் போன்ற மருந்துகளை கஷாயமாகச் செய்து பருகுவது டெங்கு காய்ச்சலை குறைப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை தரும்.

6. செவ்வாயின் காரகம் பெற்ற பப்பாளி ரத்த சுத்தியாக விளங்குகிறது. பப்பாளி இலையினை அரைத்து அதன் சாற்றினை பருகுவது ரத்தத்திலுள்ள கிருமிகளைக் கொன்று ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.

7. செவ்வாய் மற்றும் சனியின் காரகம் பெற்ற சுதர்சன மாத்திரை காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கிறது.

8. நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம்,  திருமுருகாற்றுப்படை, சுதர்ஸனாஷ்டகம்,  ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வது.

9. மிகவும் தீவிரமான நிலையில் சுதர்ஸன ஹோமம் மற்றும் ஜெபம் செய்வது

10. ரத்தத்தின் காரகரான செவ்வாய் பலமிழந்த நிலையில் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்களை அதிகரிக்க ரத்தம் ஏற்றுவது கூட செவ்வாயிற்கான பரிகாரமே என்பதை இங்குக்  குறிப்பிட வேண்டியிருக்கிறது.

11. மாரியம்மனை செவ்வாய் மற்றும் ராகுவின் அம்சமாக  ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு பிரார்த்தனை மிகவும் மகத்துவம் நிறைந்த பிரார்த்தனை மற்றும் பரிகாரமாகும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com