புதன்கிழமை 26 ஜூன் 2019

தேரில் பவனி வந்த குமரகோட்டம் முருகப் பெருமான்

DIN | Published: 16th May 2019 02:31 AM
திருத்தேரில் பவனி வந்த முருகப் பெருமான். 


வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, குமரகோட்டம் முருகப் பெருமான் புதன்கிழமை திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை மாலை இரு வேளைகளிலும் ஆடு, சூரிய, சந்திர, தேவேந்திர, மயில், பூத, கேடயம் மங்களகிரி, யானை, புலி உள்ளிட்ட வாகனங்களில் முருகப் பெருமான் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையடுத்து, புதன்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். பின்பு, ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியே கொண்டுவர பாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்
அத்திவரதர் பெருவிழா: அன்னதானக் குழுவினருக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்
லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருமலையில் கனமழை
உச்சநீதிமன்ற நீதிபதி வழிபாடு