சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜர்

DIN | Published: 16th May 2019 02:30 AM
மோகினி அவதாரத்தில் பல்லக்கில் வலம் வரும் கோவிந்தராஜஸ்வாமி.


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜஸ்வாமி மாடவீதியில் வலம் வந்தார். 
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 5-ஆம் நாளான புதன்கிழமை காலை 7 மணிமுதல் 8.30 மணிவரை மோகினி அவதார சேவை நடைபெற்றது. 
மோகினி அவதாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிந்தராஜஸ்வாமி மாடவீதியில் வலம் வந்தார். 
தாயார் வடிவில் வலம் வந்த பெருமாளை அங்கு கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். அதன்பின், மதியம் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.  
இரவு 8 மணிக்கு பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையான கருடசேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் கோவிந்தராஜர் ஆண்டாள் சூடிய மாலை, ஏழுமலையானின் தங்க சகஸ்ர காசு மாலை உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு மாடவீதியில் வலம் வந்தார். 
கருட சேவையைக் காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். 
இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  வாகன சேவையின் போது கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டன. மேலும் கோயில் எதிரில் உள்ள திருக்குளக்கரையில் மாலை வேளையில் கதாகாலட்சேபம், பக்திப் பாடல்கள், ஹரிகதை, ஆடல், பாடல் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 
வாகன சேவைக்கு முன் ஜீயர்கள் நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்தனர். 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் அருகே  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
ஆம்பூரில் இன்று அத்திவரதர் தரிசனம்
தேவஸ்தானத்துக்கு வாகனம் நன்கொடை
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்துக்கான வாகனப் பட்டியல்