சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

வடபழனி முருகன் கோயிலில் தேர்த் திருவிழா: திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

DIN | Published: 15th May 2019 03:12 PM

 

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி இன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் விழாவும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருவிழா கடந்த மே 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து, 17-ம் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

18-ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 

மறுநாள் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து வரும் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

குறிப்பாக, தினமும் மாலை 6 மணியில் முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தெய்வீக பாடல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதில் முதல் நாளான 20-ம் தேதி இரவு 7 மணிக்கு வீரமணி ராஜூவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் அருகே  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
ஆம்பூரில் இன்று அத்திவரதர் தரிசனம்
தேவஸ்தானத்துக்கு வாகனம் நன்கொடை
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்துக்கான வாகனப் பட்டியல்