கன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி மற்றும் ஹைதராபாதில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில்களில் நாள்தோறும் தலா 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
கன்னியாகுமரி ஏழுமலையான் கோயில் (கோப்புப் படம்).
கன்னியாகுமரி ஏழுமலையான் கோயில் (கோப்புப் படம்).


கன்னியாகுமரி மற்றும் ஹைதராபாதில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில்களில் நாள்தோறும் தலா 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பங்கேற்று பக்தர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1,381 கிலோ தங்கக் கட்டிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. அவற்றை திருப்பதிக்கு கொண்டு வரும் பொறுப்பை அந்த வங்கி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த பிறகும் தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அதன்பின் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நற்சான்று அளித்த பிறகே தங்கக் கட்டிகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து தேவஸ்தானத்தின் மீது பல்வேறு அவதூறுகள் கூறப்பட்டன. எனவே, அந்த விவகாரம் குறித்து தேவஸ்தானம் விளக்கமளித்தது. 
பக்தர்களின் வருகைக்கு தக்கவாறு திருமலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
ஹைதராபாத் மற்றும் கன்னியாகுமரியில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில்களில் நாள்தோறும் தலா 4 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 9 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டு விவரங்கள் வரும் 7-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. ஏழுமலையான் கோயிலுடன், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், திருப்பதி கோவிந்தராஜர் கோயில், அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில், ஒண்டிமிட்டா பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயில் ஆகியவற்றின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை காலை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com