புதன்கிழமை 17 ஜூலை 2019

67,737 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு

DIN | Published: 04th May 2019 02:30 AM

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 67,737 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான 67,737 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டது. இதை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். 
தகவல் கிடைத்த பக்தர்கள் 3 தினங்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை, விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் வழங்குகிறது. 
நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்டுகள் விவரம்:

சுப்ரபாதம்    8117
தோமாலை    120
அர்ச்சனா    120
அஷ்டதள பாதபத்மாராதனை    180
நிஜபாதம்    2875
மொத்தம்    11,412
மற்ற சேவா டிக்கெட்டுகள்
சேவையின் பெயர்         டிக்கெட் எண்ணிக்கை
கல்யாண உற்சவம்    13,300
ஆர்ஜித பிரம்மோற்சவம்    7,425
வசந்தோற்சவம்    14,300
ஊஞ்சல் சேவை    4,200
சகஸ்ர தீபாலங்கார சேவை    15,600
விசேஷ பூஜை    1500

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமி விழா
பிடாரி செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
சாய் மந்திர் கோயிலில் குரு பௌர்ணமி பூஜை
திருமலையில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு