செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

DIN | Published: 03rd May 2019 11:00 AM

 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 3 - மே 9) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்களை மாற்றியமைத்து, வெற்றியடைவீர்கள். தீயோர் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாகவே முடியும். விவசாயிகள் எதிர்பாராத  மகசூல் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவர். கால்நடைகளால் நல்ல பலனைக் காண்பார்கள்.   

அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு மேலிடத்தில் பாராட்டுகள் பெறுவார்கள். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும்.  தைரியத்துடன் எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள்.   

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை தரிசிக்கவும்.

அனுகூலமான தினங்கள்: 3, 4.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பில் ஸ்திரத்தன்மை ஏற்படும். தேக ஆரோக்கியம் கூடும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். செயல்களில் தனித்தன்மை வெளிப்படும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இருப்பினும் உங்கள் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடும். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். எனினும் வரவும் செலவும் சரியாக இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். சாதுயர்த்துடன் அவர்களுக்குப் பதிலடி கொடுத்து அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு இது சாதகமான காலமாகும். புகழும் பொருளும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தோம்பலில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறந்தோர் வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வந்து சேரும். சாதுர்யத்துடன் செயல்பட்டு நல்ல லாபத்தையும் அள்ளுவார்கள்.  விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வருமானம் திருப்தி
கரமாக இருக்கும். நீர்ப்பாசன மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். விளையாட்டில் புதிய யுக்திகளைச் செயல்படுத்த வேண்டாம்.

பரிகாரம்: "நமசிவாய' என்று தினமும் 108 முறை ஜபித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திறமைகள் பளிச்சிடும். பொருளாதாரச் சூழல் நன்றாக இருக்கும். எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி அடையும். மதிப்பு மரியாதைகள் அதிகரிக்கும். சோம்பேறித்தனத்தைத் தள்ளி வைக்கவும். தீயோரை கண்டறிந்து ஒதுக்கி விடுவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிகரிப்பதால் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளுக்கு உங்கள் பிரச்னைகள் புரியாமல் போக இடமுள்ளது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக முடியும். வாடிக்கையாளர்களை கனிவான பேச்சினாலும்  நடத்தையாலும் கவர்வீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவீர்கள். புதிய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகள் தம் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார்கள். தொண்டர்களை அரவணைத்து சென்றால் மேலும் நன்மை அடையலாம். கலைத்துறையினர்  வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

பெண்மணிகளுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். பேசும்போது எச்சரிக்கை தேவை. மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவும். அம்மனை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உறவினர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கிவிடும்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் சமாளிப்பீர்கள்.  வியாபாரிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். எனினும் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.

பெண்மணிகள் மங்களகரமான செய்திகளைக் கேட்பார்கள். மனதில் தெளிவுகள் பிறக்கும். சேமிப்பு விஷயத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பிலும் அக்கறை செலுத்தவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 5, 6. 

சந்திராஷ்டமம்: 3.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் சரளமாக இராது. புதிய கடன் வாங்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் விரோதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனப் பயணத்திலும் கவனம் தேவை. எடுத்த காரியங்களை குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அனைவரிடத்திலும் சுமுகமாகப் பழகவும். இந்த காலகட்டத்தில் சற்று அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரிகள் தங்கள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடவும். விவசாயிகளுக்கு அலைச்சல் அதிகமானாலும்  வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் உண்டாகும்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். கடந்த காலங்களில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். கலைத்துறையினர் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்றங்களைக் காண்பார்கள். 

பெண்மணிகள் கணவருடன் இணக்கமாக இருப்பார்கள். குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார்கள். மாணவமணிகள் கிரிக்கெட் , ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். பெற்றோர் ஆதரவுடன் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: காகத்திற்கு அன்னமிடவும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: 4, 5.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

அனைத்து முயற்சிகளிலும் பலன் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கேட்டு வரும் நபர்களிடமிருந்து தள்ளி இருக்க முயற்சி செய்யுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலைப்பளு குறையும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் வசூலாகும். கொடுக்கல்வாங்கல்கள் லாபகரமாக முடியும். விவசாயிகள் லாபம் பெறுவார்கள். கால்நடைகளை வாங்கி உபரிவருமானத்தைப் பெருக்கவும்.  

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். மாற்றுக் கட்சிக்காரர்களும் உங்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினரின் பெயரும் புகழும் பெறக்கூடிய சாதனைகளைச் செய்வார்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள்  வாசற் கதவைத் தட்டும். 

பெண்மணிகள் இல்லத்தில் அமைதியைக் காண்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். போதிய பயிற்சிகள் மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: சிவபெருமானை தரிசித்து நன்மையை பெருக்கிக் கொள்ளுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 4, 5.

சந்திராஷ்டமம்: 6, 7.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வாழ்க்கையில் சிறு சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில்  முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மற்றவர்களுக்கு வாக்குக்கொடுப்பதையோ, முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் எல்லோரிடமும் சுமுகமாகப் பழகவும். புதிய பொறுப்புகளை நாடிச் செல்ல வேண்டாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை சறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். அவர்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும்.  விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி லாபம் பெறுவர். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு பல நாள்களாக தடைப்பட்டு வந்த செயல்கள் வெற்றியுடன் முடிவடையும். 

பெண்மணிகள் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தவும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்:  ராம நாமத்தை ஜபித்தபடி ஆஞ்சநேயரை சுற்றி வரவும். 

அனுகூலமான தினங்கள்:  6, 7. 

சந்திராஷ்டமம்: 8, 9.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் உடலும் மனமும் சோர்வடையும். புதிய தெளிவுகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கூடும். சூழ்நிலைகளில் புதிய மாற்றங்கள் தோன்றும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கடந்த சில காலங்களாகத் தொடர்ந்து வரும் பிரச்னைகளிருந்து விடுபட்டு புதிய மாற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே முடியும். புதிய சந்தைகளை நாடிச்சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தை அதிகரிப்பார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் சற்று கூடும். 

அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும்.  திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்க வேண்டாம். 

பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 4, 7. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் காரியங்கள் நேர்த்தியாக முடிவடையும். குடும்பத்தில் நின்று போயிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தினருடன் அமைதியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து சுபச் செய்திகள் வந்து மகிழ்விக்கும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். வீடு, வாகனங்கள் வாங்குவதற்காகச் செய்த விண்ணப்பங்கள் சாதகமாகும். வியாபாரிகளுக்கு பேச்சில் வசீகரம் கூடும். முன்னேற்றத்திற்கான வீடு, வாகனங்கள் வாங்கும்  யோகம் உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள் முதல் லாபம் தொடரும். எனினும் விவசாய இடுபொருள்களுக்குச் செலவிடுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உட்கட்சிப்பூசலில் மனம் வருந்த  நேரிடும். கட்சி மேலிடத்தில் உங்கள் மீது அபவாதமும் ஏற்படலாம். கலைத்துறையினர் தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெயர், புகழ் கூடும். வருமானம் சீராக நடக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி அடைவார்கள்.

பரிகாரம்: காலபைரவரையும் துர்க்கையையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 5, 8. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். கவலைகள் குறையும். செலவுகளை அதிகரிப்பதால் சிக்கனத்தை மேற்கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். எதிர்பாராத குழப்பங்களும் வந்துசேர வாய்ப்பு இருப்பதால்  எச்சரிக்கை தேவை. 

உத்தியோகஸ்தர்கள் இடைவிடாது உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் தொடரும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தவும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் யாவும் சந்தோஷமாக முடியும். தானிய விற்பனையும் பால் வியாபாரமும் நன்றாக நடக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். ஆகவே தொண்டர்களை அனுசரித்துச் சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதிலும் பண வரவிலும் சற்று தாமதம் ஏற்படும். 

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். கணவரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மாணவமணிகள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனீஸ்வரபகவானை தீபமேற்றி வழிபடுவது நல்லது. 

பெருமாளையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

செய்யும் செயல்களில் முன்னேற்றம் தென்படும். எதிரிகள் அடங்கிப்போவர். வெளியிடங்களிலிருந்து இனிய செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் சேமிப்புகள் பல மடங்காகும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, சிந்தனைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும். 

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். பெண்மணிகளின் பொறுப்பற்ற பேச்சுகளால் குடும்பத்தில் சுமுகமான சூழல் பாதிக்கப்படும். 

மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனைப் பார்க்கலாம். வெளிவிளையாட்டுகளில் அதிகமாக ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் சனிபகவானையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 8.

சந்திராஷ்டமம்:  இல்லை.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு
இன்று நள்ளிரவில் சந்திரகிரகணம்: சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை