மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழா புதன்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மாசிப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மயானக்கொள்ளை நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், ஆண் பூத வாகனத்தில் அம்மன் தலைவிரி கோலத்துடன் மயானத்தை நோக்கி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டார்.

அங்கு பக்தர்களால் எடுத்துவரப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் படையலாக மலை போல் குவிக்கப்பட்டிருந்தன.
மயானத்தை நோக்கி வந்த அம்மனுக்கு இந்த படையல் படைக்கப்பட்டது.

பின்னர், அம்மன் மீது சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வாரி இறைக்கப்பட்டன. இதனை கூடியிருந்த பக்தர்கள் எடுத்துச் சென்றனர். விழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை தீ மிதித் திருவிழாவும், 7-ம் நாளான திங்கள்கிழமை திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், கூடுதல் உதவி ஆணையர் மோகனசுந்தரம், அறங்காவலர் கு.கணேசபூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com