சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மார்ச் 12 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இவ்விழாவை காலை 7 மணி அளவில் சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரரூ கொடியேற்றி தொடங்கி வைக்கிறார்
21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள உற்சவ விழாவில் நாள்தோறும் ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், கணபதி ஹோமம், முளைக்கட்டப்பட்ட நவதானிய பூஜை, அத்தாழ பூஜை, ஸ்ரீ பூதபலி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக 20 ஆம் தேதி இரவு பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், 21 ஆம் தேதி பம்பை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டும் அபிஷேகமும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம்தெரிவித்துள்ளது.