திங்கள்கிழமை 22 ஜூலை 2019

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்

DIN | Published: 26th June 2019 12:17 PM

 

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஜூலை 1-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. 

பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி அங்குரார்பணத்துடன் நடைபெற்றது. அதையடுத்து நேற்று காலை ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அதைத்தொடர்ந்து சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. 

இன்று காலை 7.00 மணிக்கு ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலாவும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நரசிம்ம பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை காலை கருட சேவை நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜூலை 1-ம் தேதி காலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருவள்ளூர் திரௌபதி அம்மன் கோயிலில் மகா பாரத பெருவிழா
மனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும்: ஆட்சியர் பேட்டி
அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி 
திதி சூனியத்தில் நேர் - எதிர்மறை கோட்பாடுகள்!