திங்கள்கிழமை 22 ஜூலை 2019

காளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா

Published: 26th June 2019 10:58 AM

 

சிவகங்கையை ஆட்சி செய்த மன்னர் முத்துவடுகநாதரின் 247-வது குரு பூஜை விழா, காளையர் கோவிலில் நடைபெற்றது.

காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநிலச் செயலர் எஸ்.ஆர். தேவர், பாஜகவின் கோட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் காளையார்கோவிலில் உள்ள காளையீசர் சுவாமி கோயிலில் உள்ள முத்துவடுகநாதரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர், ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதையடுத்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில், காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருவள்ளூர் திரௌபதி அம்மன் கோயிலில் மகா பாரத பெருவிழா
மனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும்: ஆட்சியர் பேட்டி
அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி 
திதி சூனியத்தில் நேர் - எதிர்மறை கோட்பாடுகள்!