குருவருளும் திருவருளும் பெற அழகிய மணவாளம் வாங்க!

இப்பதிவில் ஒரு முக்கிய நிகழ்விற்கான அழைப்பை இங்கே தருகின்றோம். அழகிய மணவாளம் என்ற பெயரைக்..
குருவருளும் திருவருளும் பெற அழகிய மணவாளம் வாங்க!

இப்பதிவில் ஒரு முக்கிய நிகழ்விற்கான அழைப்பை இங்கே தருகின்றோம். அழகிய மணவாளம் என்ற பெயரைக் கேட்டதுமே நமக்கு ஒருவித புதிய உணர்வு  ஏற்படுகின்றது. இணையத்தில் அழகிய மணவாளம் என்று தேடிய போதும் கிடைத்த செய்திகளை நாம் காப்புரிமை காரணமாகத் தர முடியவில்லை. திருச்சியின் அருகில்  உள்ள ஒரு கிராமம் அழகிய மணவாளம். இங்கே ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி தாயாருடன் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் அருள்பாலித்து வருகின்றார். ஸ்ரீ ராமானுஜர் தரிசனம் செய்த  திருத்தலம் ஆகும்.

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் ஆசியாலும், மஹான்களின் ஜீவ அருள் நாடி வாக்கின் படியும் உலக நன்மைக்காக, உலகம் நலம் பெறவும், மழை வளம் பெருகவும், நீர்  வளம் உயரவும், பஞ்சபூதங்கள் சம நிலை பெறவும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பாக ஜூன் 23-ல் மிக  உயர்வான யாகமும், அபிஷேகமும், திருமஞ்சனமும் அழகிய மணவாளம் ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது. 

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை யாகங்களும், பூஜைகளும், இறைவனுக்கு மகா திருமஞ்சன அபிஷேகமும் நடைபெற்றது. சித்தர்களின் வாக்கின் படி மிக  உயர்வாக நடைபெற உள்ள இந்த அபிஷேகத்தில் 1500 லிட்டர் பசும் பாலும், 100 லிட்டர் தயிரும் மற்றும் சுத்தமான சந்தன அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது.

சித்தர் அருட்குடில் இதுவரை எண்ணற்ற யாகங்கள், பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை மகான்களின் ஜீவ அருள் நாடி வாக்கின் படி மிக மிக உயர்வாகப் பல  வருடங்களாகச் செய்துகொண்டு வருகின்றது. நடைபெறும் அனைத்து யாகங்களும், அபிஷேகங்களும் உலக நன்மைக்காக மட்டுமே சித்தர்கள் செய்யும் படி அருளானை இட்டு  வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகில் உள்ள அழகிய மணவாளம் என்ற கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் மிக உயர்வான அபிஷேகம் நடைபெற உள்ளது. மஹான்கள் அருளானையிட்டு நடைபெறும் அபிஷேகம் என்பதால் பங்குகொள்வது என்பது மிக உயர்ந்தது. அதோடு மஹான்கள் ஜீவ அருள் நாடியில் நடைபெற உள்ள அபிஷேகத்தில் ஏனைய சித்தர்களும்,மகான்களும் அரூபமாக வருகை  தருவதாக வாக்கு உரைத்து உள்ளனர்.

திருச்சியிலிருந்து வருவோர்கள் சுங்கச்சாவடி வழியாக மணச்சநல்லூர் வந்து அங்கிருந்து அழகிய மணவாளம் அடைந்து ஆலயம் வரலாம். சேலம் - நாமக்கல் - திருச்சி  மார்க்கம் வருபவர்கள் மணச்சநல்லூர் பிரியும் இடத்தில் திரும்பி அழகிய மணவாளம் வந்து ஆலயம் அடையலாம். பிற பகுதிகளிலிருந்து வருவதாக இருந்தால் திருச்சி  வந்து டோல்கேட் இல் இருந்து மேல் சொன்ன மார்க்கம் வழியாக ஆலயம் வந்து அடையலாம். பேருந்தில் வருபவர்கள் மணச்சநல்லூர் - அழகிய மணவாளம் (தேர்முட்டி) பஸ்  ஸ்டாப் வந்து அங்கிருந்து அருட்குடில் வாகனத்தில் ஆலயம் வரலாம்.

குறிப்பு:

மகான்களும்,சித்தர்களும் அபிஷேகத்திற்கு வருகை புரிவதாக சுவடியில் சித்தர்கள் கூறியுள்ள படியால் அனைவரும் அமைதியாக வந்து அபிஷேகத்தில் கலந்து  கொண்டு, ஆத்மார்த்தமாக வழிபட்டு இறைவன் அருளையும், சித்தர்களின் ஆசிகளையும் பெரும்படி கேட்டுக் கொள்கின்றோம். புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதைத்  தவிர்க்கவும்.

ஆலய அமைவிடம்

அருள்மிகு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ சுத்தரராஜ பெருமாள் ஆலயம்
அழகிய மணவாளம்,
மணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

மணச்சநல்லூரில் இருந்து  - 5 கிலோ மீட்டர் தொலைவு
ஸ்ரீரங்கத்தில் இருந்து  - 15 கிலோ மீட்டர் தொலைவு
திருப்பைஞ்சலியில்  இருந்து - 6 கிலோ மீட்டர் தொலைவு
திருவெள்ளறையில் இருந்து - 8 கிலோ மீட்டர் தொலைவு
சமயபுரத்திலிருந்து - 10 கிலோ மீட்டர் தொலைவு
திருவெறும்பூரில் இருந்து - 25 கிலோ மீட்டர் தொலைவு
உத்தமர் கோவில் ரயில் நிலையத்திலிருந்து  - 9 கிலோ மீட்டர் தொலைவு

ஆலயத்தின்  அமைவிட கூகுள் மேப் - https:oo.gl/maps/TTZTCKQ3YDdBGtrW9

- ராகேஷ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com