புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஜூன் 21-ல் நற்கருணை பவனி

மேலப்பாளையம் அருகே சேவியர்காலனியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய
புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஜூன் 21-ல் நற்கருணை பவனி

மேலப்பாளையம் அருகே சேவியர்காலனியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவையொட்டி, புனிதரின் திருவுருவ பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேவாலய திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் மாலையில் திருவிழா திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை கிறிஸ்துராஜாபுரத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் அருள்லூர்து எட்வின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, புனித அந்தோணியாரின் திருவுருவ பவனி சேவியர் காலனியின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

வியாழக்கிழமை (ஜூன் 20) மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், அசனவிருந்தும் நடைபெறுகிறது. 21ஆம் தேதி மாலை நற்கருணை பவனியும், 22ஆம் தேதி மாலை அசனவிருந்தும் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி காலை 7.30 மணிக்கு அருள்பணியாளர்கள் போஸ், ஆல்பர்ட் தலைமையில் திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது.

மாலையில் சமய நல்லிணக்கக் குழு சார்பில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிசேவியர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com