புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

ஒரு ஜாதகர் செல்வம் பெறும் வழியும்! பெறா நிலையும்!! (பகுதி 2)

By - ஜோதிட ரத்னா  தையூர். சி. வே. லோகநாதன் | Published: 12th June 2019 02:28 PM

(05.06.2019 அன்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி..)

பராசரர் அருளிய பல்வேறு சக்கரங்களில், D-2 சக்கரம் ஒரு ஜாதகர் பெறும் செல்வத்தைப் பற்றியும் பெறமுடியா நிலைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். இதனை அறிந்து ஒவ்வொருவரும் தமக்குச் செல்வ நிலை எவ்வாறு உள்ளதென முன்னமே அறிந்து அதற்கேற்ப சொத்து பெறுவதிலோ வேறு ஏதேனும் செயலில் இறங்குவதோ சரியாக முடிவுக்கு வரும். அனைத்துவித சக்கரங்களும் அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக அறிய முடியாது. D-1 சக்கரத்துடன் இணைத்தே பலனை அறிதல் அவசியமாகிறது, இவற்றைக் கவனத்தில் கொண்டே ஜோதிட பலன் காணுதல் அவசியமாகிறது. 

D-2 ஹோரா பற்றிய நிலையான விதிகள்D-2 ஹோராவில், கடகம், சிம்மம் எனும் இரண்டு கட்டத்தில் மட்டுமே அனைத்து கிரகங்களும் அமர்ந்துவிடும். கடகம் லக்கினமாக வரும் பட்சத்தில், சிம்மம் இரண்டாமிடமாக தன ஸ்தானமாக வரும். சிம்மம் லக்கினமாக வரும்போது, கடகம் பன்னிரெண்டாம் இடமாக விரையப் பாவமாக வரும்.

D -2 ஹோரா பற்றிய நிலையான விதிகள் :-

D- 2 ஹோராவில் , கடகம் , சிம்மம்  எனும்  இரண்டு கட்டத்தில் மட்டுமே அனைத்து கிரகங்களும் அமர்ந்துவிடும்.

சில முக்கிய விதிகள் :-

கடகம்

சிம்மம்

  1.  அதிக கிரகங்கள் இருப்பின்; (செல்வம் கிடைப்பது எளிது)

  1.  அதிக கிரகங்கள் இருப்பின்;        (செல்வம் கிடைப்பது கடினம் )

2.  D-1 லக்கின அதிபதி   D -2 லக்கினத்தில் இருப்பின், (சிம்ம ராசியில் )  கடக லக்கினகாரர்கள் மட்டும் ஜாதகரின் குடும்பத்தினரிடம் இருந்து (INHERITANCE) பரம்பரைச் சொத்தின் பங்கு தாரர் ஆவார் .         

2.  D-1 லக்கின அதிபதி D -2 லக்கினத்தில் இருப்பின் (கடக ராசியில் )  சிம்ம லக்கின காரர்கள் மட்டும் ஜாதகர், தன் சொந்த உழைப்பாலேயே, செல்வத்தை பெறுவார்.அவரின் மற்ற  உறவுகள், இதன் பயனைப் பெறுவார்கள்.

3.  D-1 இரண்டாம் அதிபதி ;  D-2 வில்12 ஆம் வீட்டில் அமர்ந்தால் (கடகத்தில்); அனைத்து செல்வங்களும், ஜாதகரின் வாழ்நாளுக்குள், ஜாதகரை விட்டு விலகி விடும்.

3.  D-1 இரண்டாம் அதிபதி ;  D-2 வில்  2 ஆம் வீட்டில் அமர்ந்தால்  (சிம்மத்தில்); செல்வம் சேர்வது எளிது. குறைந்த ஆதரவுடன், குறைந்த காலத்தில் செல்வம் கிடைக்கப் பெறும்.

 

 

4.  D-2 வில் கடகம் லக்கினமாக இருப்பின், அதன் 2 ஆம் வீட்டு அதிபதி சூரியன், D-1 சக்கரத்தில் 1 , 4 ,7 ,10 அல்லது 1 . 5 , 9 அல்லது  ஆட்சி, உச்சம், நட்பு ஆக இருந்தும், 6 , 8 ,12 இல் மறையாமல் மற்றும் நீச்சம் பெறாமல் இருப்பின் ..

செலவையும், உணர்ச்சிகளையும் கட்டுப் பாட்டுக்குள் வைக்க முடியும். 

4. D-2 வில் சிம்மம் லக்கினமாக இருப்பின், அதன் 12 ஆம் வீட்டு அதிபதி சந்திரன், D-1 சக்கரத்தில் 1 , 4 ,7 ,10 அல்லது 1 . 5 , 9 அல்லது  ஆட்சி, உச்சம், நட்பு ஆக இருந்தும், 6 , 8 ,12 இல் மறையாமல் மற்றும் நீச்சம் பெறாமல் இருப்பின் செல்வத்தை அதிகப் படுத்தவோ, செலவைக் கட்டுப் படுத்தவோ இயலாமல் போகும்.   வரவு, செலவு மாறி, மாறி வரும்.

2 . 3 , 11 இல் அமர்ந்தால் , ஓரளவு சொத்தை அனுபவிக்க முடியும்.

 5.  D -1 ன் , 2 ஆம் அதிபதியும், 2 ஆம் இடது காரக கிரகமான குருவும் , D -2 ஹோரா சக்கரத்தில், கடக லக்கின காரர்களுக்கு 2 ஆம் இடத்தில் , (ஒரே ராசியில் ) அமர்ந்திருந்தால் , செல்வம் சேர்வது எளிமையாகவும், குறைந்த ஆதரவுடனும், குறைந்த காலத்துக்குள் செல்வம் கிடைக்கப் பெறும்.

 5. D -1 ன் , 2 ஆம் அதிபதியும், 2 ஆம் இடது காரக கிரகமான குருவும் , D -2 ஹோரா சக்கரத்தில், சிம்ம லக்கின காரர்களுக்கு 2 / 12 ஆக அமர்ந்திருந்தால் , செல்வத்தைத் துரத்துவது  கட்டாயமாகும், இந்த அமைப்பு உடையவர்கள், பணத்தை இழப்பதோடு, வாழ்நாள் முழுவதும், அதனை தேடுவதிலேயே காலம் கழியும். வரவும் - செலவும் ஒன்றாகவே இருக்கும்.

மேற்கண்ட, உதாரண ஜாதகம் D-1 மற்றும் D-2 சக்கரங்கள் உங்களின் பார்வைக்கு. இந்த ஜாதகருக்கு செல்வம் குறைந்த காலத்தில், குறைந்த ஆதரவுடன் செல்வம் கிடைக்கப் பெறுவார் என்பதில் எள்ளளவும் ஐயப்படத் தேவையில்லை. 

ஒரு ஜாதகர் செல்வம் பெறும் வழியும்! பெறா நிலையும்!! (பராசரர் கூறும் D-2 சக்கரம் மூலம் அறியும் வாய்ப்பு) -பகுதி 1

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம்.

- ஜோதிட ரத்னா  தையூர். சி. வே. லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 சித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்!
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்
சொர்க்கத்தை அடைய இதுவும் ஒரு வழி!
திருவாலங்காடு திருத்தலத்தில் உழவாரப்பணி
உண்டியல் காணிக்கை ரூ 3.92 கோடி