திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

திருப்பரங்குன்றத்தில் ஒரு வாரத்தில் மீண்டும் தங்கத்தேர் இயக்கப்படும்

DIN | Published: 08th June 2019 11:34 AM


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 மாதங்களுக்குப்பின் தங்கத்தேர் மராமத்து பணி தொடங்கியது. 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு 11 கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி மற்றும் 450 கிலோ தாமிரம் கொண்டு 11 அடி உயரத்தில் புதிய தங்கத்தேர் செய்யப்பட்டது.

இதில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள கோயில் திருவாச்சி மண்டபத்தை தங்கத்தேர் வலம் வரும். இதற்காக கோயில் நிர்வாகம் ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வந்தது. திருவிழா காலங்களில் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்லும் நாள்கள் தவிர்த்து மற்ற நாள்கள் கோயிலில் தங்கத்தேர் உலா நடைபெறும்.

தங்கத்தேர் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் தேரில் உள்ள பொம்மைகள் மற்றும் சக்கரங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து மராமத்து பணிக்காக தங்கத்தேரை கோயில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனாலும் மதுரை மண்டல நகை சரிபார்க்கும் அதிகாரி, நகை மதிப்பீட்டாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்ததால் இதனால் தங்கத்தேரை சரிசெய்யும் பணியில் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள், ஆன்மிக அமைப்புகள் உள்ளிட்ட பலர் தங்கத்தேரை விரைவில் சரிசெய்ய கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். 

இந்நிலையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், தங்கத்தேரை மராமத்து செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணி ஒரிரு நாள்களில் நிறைவடைந்து ஒரு வாரத்தில் மீண்டும் தங்கத்தேர் இயக்கப்படும் என கோயில் துணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.

முன்னதாக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் பா.சரவணன் கோயில் அலுவலகத்திற்கு வந்து, துணை ஆணையர் மாரிமுத்துவிடம் தங்கத்தேர் மராமத்து பணி குறித்து விசாரித்துச் சென்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன? பரிகாரமாக என்ன செய்யலாம்??
ஆவணி கடை ஞாயிறு கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஜமீன் பல்லாவரத்தில் 9 அடி உயர ராகு பகவான் சிலை
திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்
ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்