செய்திகள்

பிரகதீசுவரர் திருக்கோயிலில் இன்று மகா அபிஷேகம்

31st Jul 2019 10:57 AM

ADVERTISEMENT

 

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் திருக்கோயிலில் இன்று மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 

கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக கொண்டு, கங்கை முதல் கடாரம் வரை வெற்றிபெற்று ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த தினமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிரகதீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி உலகப் பிரசித்திபெற்ற பிரகதீசுவரர் கோயில் உள்ள பதிமூன்றரை அடி உயரமும், 62 அடி சுற்றளவு கொண்ட லிங்கத்துக்கு இன்று(ஜூலை 31) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT