செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை உண்டியல் காணிக்கை ரூ.1.93 கோடி

31st Jul 2019 02:25 AM

ADVERTISEMENT


திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடி கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் உண்டியலில் ரூ. 1.93 கோடி ரொக்கம், 405 கிராம் தங்கம், 10, 813 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
 திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, கடந்த 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் மலைக் கோயிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்தினர்.
 இந்நிலையில், கோயில் தக்கார் வே.ஜெய்சங்கர், இணை ஆணையர் இரா.ஞானசேகர், உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கடந்த 2 நாள்களாக கோயில் ஊழியர்கள் எண்ணினர். 
இதில், ரூ. 1,92,81,847 ரொக்கம், 405 கிராம் தங்கம், 10,813 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT