செய்திகள்

ஆகஸ்ட் மாதம் திருமலையில் நடைபெறவுள்ள உற்சவங்கள்

31st Jul 2019 02:25 AM

ADVERTISEMENT

திருமலையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் பலவிதமான உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்கள் என வகைப்படுத்தி உள்ளது. இதில், ஏழுமலையானுக்கு நடைபெறும் உற்சவங்கள் மட்டுமல்லாமல், அவரின் தொண்டர்களான ஆழ்வார்களின் திருநட்சத்திரங்களையும் உற்சவங்களாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. மேலும், மாதத்தோறும் திருமலையில் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் திருமலையில் நடைபெறவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 
உற்சவ பட்டியல் விவரம்:
தேதி                      உற்சவம்
ஆக.3               ஆண்டாள் திருவாடிபூரம் உற்சவம்
          5                கருட பஞ்சமி
          6                கல்கி ஜெயந்தி
          9                வரலட்சுமி விரதம், தரிகொண்ட வெங்கமாம்பா ஜெயந்தி 
         10              பவித்ர உற்சவத்துக்கு அங்குரார்ப்பணம்
         11              மதத்ரய ஏகாதசி
 11-13              வருடாந்திர பவித்ரோற்சவம்
         12            நாராயணகிரியில் சத்ரதபனோற்சவம்
         15            ஆடி பௌர்ணமி, ஹயக்கிரீவ ஜெயந்தி, விகனஸ ஜெயந்தி
         16            ஏழுமலையான் விகனஸ ஆச்சார்யர் சந்நிதி எழுந்தருளல்
         23            கோகுலாஷ்டமி
         24            உட்லோற்சவம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT