செய்திகள்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆக.3-ல் ஆடிப்பூர தேரோட்டம்

27th Jul 2019 10:51 AM

ADVERTISEMENT

 

பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆக.3-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. 

இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி பிரம்மோத்ஸவம், ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றவையாகும். நிகழாண்டு ஆடிப்பூர பிரம்மோத்ஸவத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, காலை 6 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மூலவர் பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, உற்சவர் பெரியநாயகி அம்பாள் கொடிமரம் அருகே எழுந்தருளினார்.

ADVERTISEMENT

இதையடுத்து, சிவாச்சாரியார்கள் காலை 8.30 மணியளவில் கொடியேற்றினர். பின்னர், உற்சவர் அம்பாள் 2-ஆம் பிரகார மாட வீதியில் உலா வந்தார். நிகழ்ச்சியில், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் மாட வீதியில் உலாவும் நடைபெறும். விழாவின் 9-ஆம் நாளில் (ஆக.3) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT