செய்திகள்

16-வது நாளில் ரோஸ் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

16th Jul 2019 02:46 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் அத்திவரதர் 16-வது நாளில் இன்று ரோஸ் பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர் இந்தாண்டு கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில், 16-வது நாளில் இன்று ரோஸ் பட்டாடை அணிந்து, ஏலக்காய் மாலை தாமரைப் பூமாலை, செண்பகப் பூமாலை உள்ளிட்டவை அணிவித்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்துவருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT