செய்திகள்

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்

16th Jul 2019 02:55 AM

ADVERTISEMENT


திருமலையில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்கள் அனைத்தும் 11 மணிநேரம் மூடப்பட உள்ளன.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நள்ளிரவு 1.40 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4.39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் நிகழ்வதற்கு 6 மணிநேரத்துக்கு முன்பாக, தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்கள் மூடப்படுவது வழக்கம். 
அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் மூடப்பட உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் கோயில்களைத் திறந்து சுத்தி, புண்ணியாவாசனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, அதன் பிறகே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 
முன்னதாக, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ள கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்' என்ற தூய்மைப்படுத்தும் பணிக்காக அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, அன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணிவரை தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர். மற்ற தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சந்திரகிரகணத்தை முன்னிட்டு பௌர்ணமி இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT