செய்திகள்

அமராவதியில் விரைவில் தேவஸ்தான அலுவலகம்

16th Jul 2019 02:54 AM

ADVERTISEMENT


ஆந்திரத் தலைநகர் அமராவதியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அலுவலகத்தை அமைக்குமாறு சுப்பா ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவின் தலைவராக அவர் அண்மையில் ஆந்திர அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உத்தரவுப்படி அமராவதி அருகில் உள்ள தாடேபள்ளிகூடம் பகுதியில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அலுவலகத்தை அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அலுவலகத்தில் 6 ஊழியர்கள் செயல்படுவர். இதற்கான அரசு உத்தரவு திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இதுவரை தேவஸ்தான வரலாற்றில் இல்லாத விதமாக அறங்காவலர் குழு தலைவர் அலுவலகம் முதன்முறையாக தலைநகரில் அமைக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT