செய்திகள்

ஆனி பௌர்ணமி: திருவண்ணாமலையில் எப்போது கிரிவலம் செல்லலாம்?

15th Jul 2019 11:18 AM

ADVERTISEMENT

 

ஆனி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவனின் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பௌர்ணமி நாள்களில் வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 

இந்த நிலையில், ஆனி மாதப் பௌர்ணமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) அதிகாலை 2.43 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 3.34 மணிக்கு முடிவடைகிறது. 

ADVERTISEMENT

எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT