21 ஜூலை 2019

திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா ஆலோசனைக் கூட்டம்

Published: 13th July 2019 02:20 AM


திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற து.
இக்கோயிலில் வரும் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை தரிசிப்பர்.
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்துத் துறையினரின் முன்னேற்பாடுகள் குறித்து திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பவணந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இதில், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்று தங்களது துறையின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதரை காண 5 கி.மீ. நடந்து சென்று தரிசித்த பக்தர்கள்
காவி நிறப்பட்டில் அருள் பாலிக்கும் அத்திவரதர்: சுவாமியை தரிசிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?
மீனாட்சி -  சுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.26 கோடி