செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

70,028 பக்தர்கள் தரிசனம் 

Published: 12th July 2019 02:26 AM


ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 70,028 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 22,908 பேர் முடி காணிக்கை செலுத்தினர். வியாழக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, 28 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணி நேரத்துக்குப் பின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பினர்.
புதன்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 12,409 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,685 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 17,492 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 832 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,908 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

புகார் தெரிவிக்க...
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399. 

வெப்பநிலை...
திருமலையில் புதன்கிழமை வெப்பநிலை அதிகபட்சமாக 71 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்சமாக 41 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்தது. 

உண்டியல் காணிக்கை  ரூ. 2. 87 கோடி
திருப்பதி, ஜூலை 11: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 2.87 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு, ரூ. 2.87 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 13 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 13 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

சோதனைச் சாவடியில் ரூ. 2. 18 லட்சம் வசூல்
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 88,178 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 10,490 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.18 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 15,920 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜாதகருக்கு திடீர் தடுமாற்றம் பாதகமா! சாதகமா!!
ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க..!!
சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஷோடச மஹாலக்ஷமி யாகம்
கொளத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் 37-ம் ஆண்டு திருக்கல்யாண மஹோத்சவம்
மஹாளய அமாவாசையில் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்!