செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

கும்பகோணம் சிவாலயங்களில் ஆனித்திருமஞ்சன விழா கோலாகலம்

DIN | Published: 09th July 2019 05:25 PM

 

கும்பகோணம் பகுதி திருக்கோயில்களில் ஆனித்திருமஞ்சன விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

கோயில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள சிவாலயங்களான ஆதிகும்பேஸ்வரர், சோமேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய ஆலயங்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஒரு வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் ஒன்றாகிய ஆனித் திருமஞ்சன விழா (சாயரக்ஷை அபிஷேகம்) நேற்று (8-7-2019) மாலை நடைபெற்றது.

இவ்விழாவினையொட்டி அருள்மிகு ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு பலவித அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும்   அலங்காரமும் அதனைத் தொடர்ந்து தூப, தீபாரதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

- குடந்தை சரவணன் 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஆனித்திருமஞ்சனம் கும்பகோணம் சோமேஸ்வரர் நாகேஸ்வரர்

More from the section

2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.65 கோடி
திருமலையில் ஆகஸ்ட் 18 வரை வார இறுதியில் விஐபி தரிசனம் ரத்து
அமராவதியில் விரைவில் தேவஸ்தான அலுவலகம்