செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அத்திவரதரை இன்னும் தரிசிக்கவில்லையா? உங்களுக்காகவே தரிசன நேரம் மேலும் நீட்டிப்பு!

Published: 09th July 2019 04:08 PM

 

அத்திகிரி அருளாளனை இனி இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 8 நாட்களில் சுமார் 8.50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பதாவது நாளான இன்றும் கூட்டம் கணிசமாக அதிகரித்துக் காணப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் நேரம் அறிவிக்கப் பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இனி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்க கால நேரம் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : காஞ்சிபுரம் kanchipuram அத்தி வரதர் athi varadar அத்திகிரி athigiri

More from the section

2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.65 கோடி
திருமலையில் ஆகஸ்ட் 18 வரை வார இறுதியில் விஐபி தரிசனம் ரத்து
அமராவதியில் விரைவில் தேவஸ்தான அலுவலகம்