செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

இந்த இரு நாட்கள் மட்டும் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்!

DIN | Published: 06th July 2019 12:30 PM

 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்தவாறு உள்ளனர்.

அத்திவரதர் பெருவிழா 48 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறும் நாள்களில், சுமார் 22 நாள்களுக்கு வழக்கமாக நடைபெறவுள்ள உற்சவங்களும் நடைபெறவுள்ளன. அதன்படி, முதலில் தொடங்கிய கோடை உற்சவம் ஜூலை 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களை விட வெள்ளிக்கிழமை பக்தர்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டதுடன், மாலை 5 மணிக்கு மேலும் அதிகமானோர் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால், மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைப்படி, வரும் ஜூலை 11, ஜூலை 15 ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோடை உற்சவம் நடைபெற்றாலும் இதர நாள்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவுக்குப் பிறகு வஸந்த மண்டபத்தில் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் முடிந்தது எனக்கூறி வஸந்த மண்டபக் கதவுகள் அடைக்கப்பட்டன. 

இதனால், கூடுதல் நேரம் அறிவிப்புக்குப் பிறகு வந்த பக்தர்கள் அத்திவரதரை காணவேண்டும் என கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் இத்தகவலை அறிந்ததும், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இரவு 8 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என உத்தரவிட்டார். அதன்பிறகு, பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு, கோடை உற்சவத்திலும் கலந்துகொண்டு உற்சவரை தரிசனம் செய்து வழிபட்டனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : athi varadar darshan time kanchipuram astrology tamil astro

More from the section

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்
அத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை
சித்தானந்தேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்