செய்திகள்

சகடபுரம் ஆஞ்சநேயர் கும்பாபிஷேக விழா

6th Jul 2019 03:01 PM

ADVERTISEMENT


சகடபுரம் கிளைமடமான தாம்பரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் ஒன்பது அடி உயர சிலை பிரதிஷ்டை மற்றும் பிரம்ம கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 4, 2019-ல் சிறப்பாக நடைபெற்றது. ஜகத்குரு ஸ்ரீபதரீ சங்கராச்சார்ய ஸ்ரீஷேத்ர சகடபுர ஸ்ரீவித்யாபீடாதீஸ்வரர் ஸ்ரீவித்யாபிரவ ஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளின் அமுத பொற்கரங்களால் அபிஷேகம் ஆராதனை, கும்பாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

காலை 9.15 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு பால், தயிர், நெய், தேன், வெல்லம், இளநீர், கரும்புச்சாறு, மஞ்சள், குங்குமம், செந்தூரம், சந்தனம், சந்தனம், அஷ்டகந்தம், விபூதி, பன்னீர், அரிசி மாவு, வாசனை திரவியம், உலர்ந்த பழங்கள், ரசாயனம், வெட்டிவேர், கலசாபிஷேகம் ஆகியன ஆசார்ய ஸ்வாமிகளின் அமுத பொற்கரங்களால் நிகழ்த்தப்பெற்றன. 

ஜவ்வாது, அத்தர், வஸ்திர அலங்காரங்கள், ஆபரணங்கள், துளசி, வில்வம், மல்லிகை, ரோஜா மாலைகள் சார்த்தப்பெற்று அர்ச்சனைகள் நடைபெற்று தீபாராதனைகள் நடைபெற்றன. 

ADVERTISEMENT

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து இன்புற்றனர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகார்யம் M சந்திரமௌலீஸ்வரன் அவர்கள் செய்திருந்தார்கள். 

தகவல் - இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்

ADVERTISEMENT
ADVERTISEMENT