செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அத்திவரதர் தரிசனத்துக்கு இன்று முதல் 6 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

DIN | Published: 06th July 2019 01:03 PMகாஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழாவையொட்டி, கடந்த 1-ம் தேதி முதல் அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கும் புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது .

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கைகளுக்கு இணங்க, மேலும் 6 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. 

முதல் ரயில், காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை மார்க்கத்தில், காஞ்சிபுரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.20 மணிக்கு செங்கல்பட்டு வந்து, பின்னர் சென்னை கடற்கரையை அடையும். 2-வது ரயில் காஞ்சிபுரத்திலிருந்து மாலை 4.30-க்கு புறப்பட்டு செங்கல்பட்டு வழியாக மாலை 5.40-க்கு தாம்பரம் செல்லும்.  

3-வது ரயில் இரவு 7.45-க்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு வழியாக இரவு 11.40-க்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.

4-வது ரயில் சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் மார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும்.

5-வது ரயில் சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு வழியாக காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும்.

6-வது ரயில் செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரம் வந்தடையும். 

இவ்வாறு 6 சிறப்பு ரயில்கள் அத்திவரதர் பெருவிழாவையொட்டி இயக்கப்படவுள்ளன.  பக்தர்கள் இதனைப் பயன்படுத்தி அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : அத்தி வரதர் சிறப்பு ரயில் அரக்கோணம் காஞ்சிபுரம் special train kanchipuram athi varadar

More from the section

2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.65 கோடி
திருமலையில் ஆகஸ்ட் 18 வரை வார இறுதியில் விஐபி தரிசனம் ரத்து
அமராவதியில் விரைவில் தேவஸ்தான அலுவலகம்