செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேர்த் திருவிழா பணிகள் தீவிரம்

DIN | Published: 03rd July 2019 01:04 PM

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் தேர்த் திருவிழாவுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான விழா இம் மாதம் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா நாள்களில் கற்பக விருட்சம், வெள்ளிக் கமலம், தங்க பூத வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்டவற்றில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

ஜூலை 13ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளல், உள்பிரகாரம் உலா வருதல், மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் வீதி உலா, இரவு 12 மணிக்கு சுவாமி நடராசப் பெருமான் பச்சை சாத்தி எழுந்தருளி திருவீதி உலா, இரவு தேர் கடாட்ச வீதி உலா, சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் நகர் வீதி உலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வாக ஜூலை 14ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

ஆனித் தேர்த் திருவிழாவுக்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் அகற்றப்பட்டு கம்புகளால் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 

பந்தல் அமைக்கும் பணிகளிலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல போலீஸாரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் தேவையான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். தற்காலிக குடிநீர்த் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கும் இடங்களை கணக்கெடுத்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்கள் குறித்து  போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
சந்திர கிரகணம்: திருப்பதி கோயில்கள் இன்று 11 மணிநேரம் மூடப்படும்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.65 கோடி
திருமலையில் ஆகஸ்ட் 18 வரை வார இறுதியில் விஐபி தரிசனம் ரத்து
அமராவதியில் விரைவில் தேவஸ்தான அலுவலகம்