இந்தாண்டின் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.25 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது சூரியனுடைய ஒளியானது பூமியை வந்தடையாது. இதைத்தான் முழு சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். இந்த அரிய நிகழ்வானது இன்று நிகழ்கிறது.
இந்தாண்டு இந்தியாவை விட வெளிநாடுகளில் சூரிய கிரகணத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். சிலி நாட்டின் நேரப்படி 3.22 மணிக்கு தொடங்கி, மாலை 5.46 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.25 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.14 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு சூரிய கிரகணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் நிகழவிருக்கும் முதல் சூரிய கிரகணம் இதுவேயாகும். இரவில் சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்த அரிய அதிசயத்தை இந்திய மக்களால் காண இயலாது. சிலி, அர்ஜெண்டினா தென் பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாகக் காண முடியும்.
பொதுவாக கிரகணத்தின்போது கதிர்வீச்சுகள் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் வயதில் முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மனநோயாளிகள் இவர்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லது. கிரகண காலத்தில் தலை சீவுதல், தாம்பத்தியம் மேற்கொள்ளுதல், பல் விலக்குதல் கூடாது. சூரிய கிரகணத்துக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைக்கலாம்.
சாதாரண நேரத்தில் மந்திரத்தை ஜெபிப்பதைவிடக் கிரகண காலத்தில் சொல்லும் மந்திரத்திற்குப் பல்லாயிரம் மடங்கு பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் சூரிய காயத்ரி மந்திரம் சொல்லலாம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜெபிக்கலாம். முடியாதவர்கள் காதால் கேட்கலாம்.
கிரகண காலத்தில் சுலபமாகச் சொல்லக்கூடிய மந்திரம் இது. ஓம் ஹ்ரீம் க்லீம் சூர்யாய நமஹ.. இதை 108 முறை சொன்னால் நல்ல பலன் கிடைக்கும். சூரியனின் அருட்கடாட்சம் கிடைக்கும்.