சனிக்கிழமை 20 ஜூலை 2019

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஜன. 21 இல் தேரோட்டம்

DIN | Published: 17th January 2019 02:51 AM
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். 


பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஜன. 20 ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டமும், ஜன. 21 இல் தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு கிராமசாந்தி, வாஸ்துசாந்தி, அஸ்த்ர தேவர் பூஜை ஆகியன நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசனம் ஆகியன நடத்தப்பட்டு வள்ளி, தேவசேனை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கொடிமண்டபம் எழுந்தருளினார். கொடி மண்டபத்தில் ஆறு கலசங்கள் வைத்து மயூரயாகம் நடத்தப்பட்டு சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து கொடிக்கட்டி மண்டபத்தில் எழுந்தருளிய தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், சந்திரமௌலீஸ்வர குருக்கள், சுந்தரமூர்த்திசிவம் ஆகியோர் செய்தனர். 10 நாள்கள் நடைபெறும் விழாவையொட்டி தினமும் காலை மாலை வேளைகளில் முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக தந்தப்பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 20 ஆம் தேதி திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், 21 - ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. நிறைவு நாளான 
24 - ஆம் தேதி தெப்பத்தேரோட்டமும் தொடர்ந்து திருக்கொடி இறக்குதல் ஆகியன நடைபெறவுள்ளது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காவி நிறப்பட்டில் அருள் பாலிக்கும் அத்திவரதர்: சுவாமியை தரிசிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?
மீனாட்சி -  சுந்தரேசுவரர் கோயிலில் ஆடிமுளைக்கொட்டுத் திருவிழா
ஆண்டாள் கிளியுடன் நீலப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்: ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம் அறிமுகம்
திருப்பதி பக்தி சேனல் தலைவராக பிருத்வி பாலிரெட்டி நியமனம்
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.26 கோடி