சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு

DIN | Published: 17th January 2019 02:49 AM
ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்க ஆண்டாள் சூடிய மாலைகளைக் கொண்டு செல்லும் திருமலை ஜீயர்கள். 


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலை ஏழுமலையானுக்கு புதன்கிழமை அணிவிக்கப்பட்டது. 
திருமலையில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஆண்டாள் நாச்சியார் மகா விஷ்ணுவுடன் இணைந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலைக்கு வந்தது. அதை திருமலை ஜீயர்கள் தலையில் சுமந்து கொண்டு மாடவீதியில் வலம் வந்த பின், கோயிலுக்குள் சென்று ஏழுமலையானுக்கு அதை சமர்ப்பித்தனர். அந்த மாலை ஏழுமலையானின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. 


 

More from the section

திருப்பதிக்குப் போவதாக இருந்தால் இப்படித்தான் போகணும்?
ராகுவும், ராகுவால் திருமணத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்!
புத்தொளி பெற்ற கீழ்க்குளத்தூர் அகஸ்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில்
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்? 
திருவண்ணாமலை கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம்