காமாட்சியம்மன் கோயில் வெள்ளித் தேரோட்டம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி அம்மன் வெள்ளித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 
வெள்ளித்தேரில் வலம் வந்த காமாட்சியம்மன்.(வலது) சிறப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன்.
வெள்ளித்தேரில் வலம் வந்த காமாட்சியம்மன்.(வலது) சிறப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன்.


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி அம்மன் வெள்ளித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 
இக்கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, மூஷிகம், மகரம், யானை, தங்கமான், தங்கக்கிளி, நாகம், ஹம்சம் (அன்னப்பறவை), முத்து சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி ரதத்தில் திருவீதியுலா வந்தார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை பத்ரபீடத்திலும், மாலை குதிரை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வந்து காட்சியளித்தார். தொடர்ந்து, திங்கள்கிழமை காலை ஆள்மேல்பல்லக்கில் உலா வந்தார்.
வெள்ளித்தேர்: இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான வெள்ளித்தேர் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, 33 அடி உயரம் கொண்ட வெள்ளி ரதத்தில் விசேஷ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன், சரஸ்வதி, லட்சுமியுடன் தேரில் வலம் வந்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு ராஜ வீதிகள் மற்றும் காமாட்சி அம்மன் சந்நிதித் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதியுலா நடைபெற்றது. அப்போது, கச்சபேஸ்வரர் கோயில் அருகே வெள்ளித்தேரில் அம்மன் வந்தபோது, வாணவேடிக்கை நடைபெற்றது. இதை பக்தர்கள் கண்டு களித்தனர். 
தீர்த்தவாரி: காமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் திருக்குளத்தில் எழுந்தருளினார். காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளனா பக்தர்கள் குளத்தில் புனித நீராடி, அம்மனை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com