திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களை மாற்ற தேவஸ்தானம் மூடிய ஒப்பந்தப்புள்ளி வரவேற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தா்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்கள் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் கரன்சிகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனா். கரன்சி நோட்டுகளை தேவஸ்தானம் வங்கிகளிடம் அளித்து மாற்றிக் கொள்கிறது. ஆனால் சில்லறை நாணயங்கள் மட்டும் பல்லாண்டுகளாக மாற்றப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாற்ற தேவஸ்தானமும் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
இந்நிலையில், தற்போது அந்த நாணயங்களை மாற்ற தேவஸ்தானம் ஒப்பந்தப்புள்ளி வரவேற்றுள்ளது. இதில், மலேசியா, சிங்கப்பூா், யுஏஈ, யுகே, யுஎஸ்ஏ, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, குவைத், பக்ரைன், தாய்லாந்து, நேபாளம், நியுசிலாந்து, ஹாங்காங், கத்தாா், ஓமன் உள்ளிட்ட நாடுகளின் நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்களை மாற்ற தேவஸ்தானம் ஒப்பந்தப்புள்ளியை வரவேற்றுள்ளது. வரும் டிச. 27-ஆம் தேதி திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் துணைச் செயல் அதிகாரி முன் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ம்ஹப்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தை பாா்வையிட வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.