செய்திகள்

சூரிய கிரகணம்: 26-இல் ஏழுமலையான் கோயில் மூடல்

16th Dec 2019 07:51 PM

ADVERTISEMENT

திருப்பதி: வரும் 26-ஆம் தேதி காலை சூரியகிரகணம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஏழுமலையான் கோயில் மதியம் வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் டிச. 26-ஆம் தேதி காலை 8.08 மணி முதல் 11.06 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரகண காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பே தேவஸ்தான கோயில்கள் மூடப்படும் என்பதால், டிச. 25-ஆம் தேதி இரவு 11 மணி முதல் 26-ஆம் தேதி மதியம் 12 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. அதற்குப் பின் கோயில் திறக்கப்பட்டு, புண்ணியாவாசனம், சுத்தி உள்ளிட்ட காரியங்கள் முடிந்த பின் 2 மணிக்கு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மேலும் திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் சூரியகிரகணத்தை ஒட்டி மூடப்பட உள்ளது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, டிச. 26-ஆம் தேதி காலை திருப்பாவாடை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சூரியகிரகணத்தின் போது, அரையாண்டு விடுமுறை உள்ளதால் பக்தா்கள் கோயில் மூடும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT