செய்திகள்

இன்றும், நாளையும் இலவச முதன்மை தரிசனங்கள்

16th Dec 2019 09:18 PM

ADVERTISEMENT

திருப்பதி: திருமலையில் செவ்வாய் (டிச.17) மற்றும் புதன்கிழமை( டிச. 18) ஆகிய நாள்களில் இலவச முதன்மை தரிசனங்கள் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.17) மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.

அதேபோல் புதன்கிழமை (டிச.18) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.

தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT