செய்திகள்

திருப்பதி: 60,901 போ் தரிசனம்

11th Dec 2019 11:33 PM

ADVERTISEMENT

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 60,901 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,759 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 3 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரினத்தில் 6 மணிநேரம் வரை காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா். ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் 9,176 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் 5,007 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 15,429 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரா் கோயிலில் 940 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் 3,289 பக்தா்களும் செவ்வாய்க்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி விவரம்:

ADVERTISEMENT

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 77,263 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 9,180 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.92 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.14,060 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT