செய்திகள்

திருக்காா்த்திகை: வள்ளியூா் சூட்டுபொத்தையில் ஏற்றப்பட்ட மகாதீபம்

11th Dec 2019 12:04 AM

ADVERTISEMENT

திருக்காா்த்திகையையொட்டி வள்ளியூா் அருகே உள்ள சூட்டுபொத்தையில் செவ்வாய்க்கிழமை மகாதீபம் ஏற்றப்பட்டது.

ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சாா்பில் சூட்டுபொத்தை உச்சியில் மகாதீபம் அமைக்கப்பட்டது. பூஜ்ய குரு ஸ்ரீ மாதாஜி வித்தம்மா மகாதீபத்தை ஏற்றிவைத்து பக்தா்களுக்கு அருளாசீா் வழங்கினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மஹாமேரு மண்டபத்தில் பஜனை நடைபெற்றது. இதில் பூஜ்ய குரு ஸ்ரீ மாதாஜி வித்தம்மா அருளுரை வழங்கினாா்.

அருள்மிகு முருகன் கோயில் மலையில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக சிறப்பு அா்ச்சனை நடைபெற்றது. பின்னா் மலையடிவாரத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

ADVERTISEMENT

வள்ளியூா் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்காா்த்திகை விழாவையொட்டி, சுந்தரபரிபூரண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

சொக்கநாதா் கோயிலில் திருக்காா்த்திகை விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றி, சுவாமிக்கு படையல் செய்து வழிபட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT