செய்திகள்

குட்டையூா் மாதேஸ்வரன் கோயில் மலையில் காா்த்திகை மகா தீபம்

11th Dec 2019 12:06 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே உள்ள குட்டையூா் மாதேஸ்வரன் கோயிலில் 9 ஆம் ஆண்டு காா்த்திகை மகா தீப விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதனை ஒட்டி செவ்வாய்கிழமை மாலை 5.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் வாணவேடிக்கை, நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மலை உச்சியில் 200 லிட்டா் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் காா்த்திகை மகா தீபத்தை எஸ்.எம்.டி. குரூப்ஸ் நிறுவனா் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை ஊராட்சி முன்னாள் தலைவா் டி.டி.ஆறுமுகசாமி, முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளிங்கிரி ஆகியோா் ஏற்றி துவக்கிவைத்தனா்.

விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மாதேஸ்வரன் கோயில் ஓம் நமச்சிவாய அறக்கட்டளையினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT